#EIA2020draft : சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும் – ராகுல் காந்தி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு இஐஏ-2020 வரைவு ஆபத்தானது, இதை அனைவரும் எதிர்க்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி நேற்று புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (இஐஏ) 2020 வரைவைப்பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி கூறிய அவர் ” இது அவமானகரமானது மற்றும் ஆபத்தானது . சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போரில் பல ஆண்டுகளாக போராடி வென்ற பல கடினமான பயன்களை மாற்றியமைத்து பின்னோக்கி கொண்டுசெல்லும் திறன் இந்த வரைவுக்கு உண்டு .

அதனால் ஒவ்வொரு இந்தியரும் இஐஏ 2020 வரைவுக்கு எதிராக எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே