சாப்பாடு முக்கியமல்ல; சரக்கு தான் முக்கியம்…! – டாஸ்மாக் முன் காத்திருக்கும் மதுப்பிரியர்கள்

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த டாஸ்மாக்குகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் படி கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ள சென்னை காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் டாஸ்மாக்குகள் தவிர மற்ற அனைத்து டாஸ்மாக்குகளும் இன்று திறக்கப்பட்டு விட்டன.

மது வாங்குவதற்கு இன்று காலை முதலே குடிமகன்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர்.

மதுவாங்க வருபவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வர வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

அப்படி பின்பற்றாவிட்டால் மது கடைகள் மீண்டும் மூடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

எப்படியானாலும் மதுவை வாங்கியே தீர வேண்டும் என்று உறுதியாக இருக்கும் குடிமகன்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றி மது வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இன்று திறக்கப்பட்ட மதுபான கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலை மோதியிருக்கிறது.

நாகலாபுரம் அருகே உள்ள மதுபான கடைகளில் நீண்ட வரிசை இருந்ததால் வெயிலை கூட பொருட்படுத்தாத குடிமகன்கள் வரிசையில் தனிமனித இடைவெளியுடன் நின்று மது வாங்கிச் செல்கின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே