முகப்பரு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? பூண்டு உங்களுக்கு உதவலாம்..!

பருவ இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முகப்பருக்கள். முகப்பரு இருந்தால் ஒருவரின் அழகு கெடுவதுமட்டுமின்றி தன்னம்பிக்கையும் பாதிக்கப்படும். கரும்புள்ளிகளும், முகப்பருக்களும் தோன்றுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

முகப்பரு ஏற்படுவதற்கான காரணம் :

அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. உடல் சூடு, ஜீன் மாற்றம் மற்றும் காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். பொடுகுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும்.

ஏன் பூண்டு பயன்படுத்தலாம்?

ஆங்கில மருந்துகளைக் காட்டிலும் வீட்டு சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்துகூட முகத்தில் உள்ள பருக்களை நீக்க முடியும். பூண்டு, காலம் காலமாக மிகச்சிறந்த நோய் நீக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு மற்றும் அதன் தோலில் இருக்கும் அல்லிசின் எனப்படும் ஆர்கனோசல்பர் கலவை ஆன்டிவைரஸ் மற்றும் பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. முகத்தில்தோன்றும் வீக்கம் மற்றும் சிவந்த தன்மையை குறைக்கவும் இவை உதவியாக உள்ளன. சிங்க், செலேனியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 ஆகிய பண்களும் பூண்டில் உள்ளதால், அவை முகத்தில் எண்ணெய் சேருவதை தடுத்து முகம் பொலிவாக இருக்க உதவுகின்றன.

பூண்டை எவ்வாறு உபயோகிக்கலாம்?

1. தோலை நீக்கிய பின்பு பூண்டை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அதனை முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மீது நேரடியாக அப்ளை செய்யுங்கள். சுமார் 10 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். உங்களின் முகப்பரு சதைப்பகுதிக்குள்ளும் இருந்தால், இரவு முழுவதும் பூண்டை முகத்தில் தடவிக்கொண்டு காலையில் எழுந்து சுத்தமாக முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே