வருமானவரி சோதனை நடத்துவதால் திமுகவின் வெற்றி பாதிக்காது – எ.வ.வேலு

திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று மாலை 5 மணியுடன் நிறைபெற்றது.

இந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வருமானவரி தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தோல்வி பயம், அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகிறார்கள் என எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்த ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும் வருமானவரி சோதனை நடத்தினால் திமுகவின் வெற்றிக்கு பாதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய எ.வ.வேலு தனது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக தகவல் கூறப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே