திருச்சியில் இன்று நடைபெற உள்ள திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழகத்துக்கான லட்சிய பிரகடனத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் வரும் மார்ச் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

இதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அதிமுக, திமுக தங்களது கட்சிகளுடன் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனிடையே நேற்று முன்தினம் அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

இந்நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே திமுகவின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பிலான மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

இதற்காக சிறுகானூரில் 700 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே