ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 5 மாவட்டங்களில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்..!!

ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு மக்களிடம் கருத்து கேட்க அவசியமில்லை என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து திமுக சார்பில் இன்று 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநிலஅரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திமுக சார்பில் தஞ்சாவூரில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும், புதுக்கோட்டையில் திலகர் திடலிலும், கடலூரில் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும், நாகையில் அவரி திடலிலும், திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும்; போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே