ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ.,கு.க. செல்வம் ??

டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ.,கு.க. செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு கு.க. செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திமுகவின் தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வந்த இவர், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் என்பது குறிபிடத்தக்கது.

கு.க.செல்வம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த செய்திக்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக எம்.எல்.ஏ.,கு.க. செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

செய்தி தொகுப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே