பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம் :

அந்த கடிதத்தில், மருத்துவ படிப்பிற்கான தகுதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓபிசியில் கிரீமிலேயர் பிரிவினரை கணக்கிட சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும்.

இதுவரையில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ள நிலையில், நமது நாடு ஒரு கடுமையான பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், அனைத்துக் குடிக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீதம் குறைந்து இருப்பது இந்தப் பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது.

எனவே நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே