கட்டுப்பாடா? ஊரடங்கா? – தொற்று நோய் நிபுணர் பிரப்தீப் தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது.

தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலிலிருந்து வரும் நிலையில், நாளையோடு அந்த ஊரடங்கு நிறைவடைகிறது.

அதனால் ஊரடங்கை மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சுமார் 2.30 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த ஆலோசனைக் கூட்டம் தற்போது நிறைவடைந்து.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மருத்துவர்கள் நிபுணர்கள் குழுவினர், ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு இல்லை.

அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீடிக்க அவசியம் இல்லை எனவும் ஊரடங்கை நீடிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கலாம். மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும்.

கள நிலவரத்திற்கு ஏற்ப நாங்கள் பரிந்துரை மட்டுமே செய்வோம். மேற்படி அரசு தான் முடிவெடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே