நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே, ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ளவர் எஸ்ஏ பாப்டே. தற்போது அவர் சொந்த ஊரான, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளார்.

64 வயதாகும் பாப்டேவுக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது ஆர்வம் அதிகம்.

முன்னர், ராயல் என்பீல்டு தயாரித்த புல்லட் வைத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, ஹார்லி டேவிட்சன் பைக் சோதனை ஓட்டத்தின் போது, விபத்து ஏற்பட்டதில் காயம் ஏற்பட்டது.

இதனால், அவரால் கோர்ட் பணிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், நாக்பூரில் பாப்டே ஹார்லிடேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

பலரும், பாப்டேவை பாராட்டி வருகின்றனர். 51 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட இந்த பைக் 2000 சிசி -வி திறனுடன் இரட்டை இன்ஜின் கொண்டது. 400 கிலோ எடை உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே