இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு..!!

B.1.1.28.2 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரசை புனேயில் உள்ள National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டன் மற்றும் பிரேசிலில் இருந்து வந்தவர்களிடம் இருந்து இந்த மரபணு மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

B.1.1.28.2 மரபணு மாற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் எடை குறைதல், சுவாச குழாயிலேயே வைரசுகள் பல்கி பெருகி, நுரையீரல் புண்கள் உருவாகும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரசை போன்றது என்றும் ஆனால் ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட அபாயகரமானது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே