தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலர் கருப்பு கருணா காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா (வயது 57) இன்று மாரடைப்பால் காலமானார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இதன் மாநில துணைப் பொதுச்செயலாளரான கருப்பு கருணா, திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கலை இரவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்திக் காட்டியவர்.

நாடகக் கலைஞர், படைப்பாளி என பன்முக ஆளுமையாளர்.

கருப்பு கருணாவின் ஏழுமலை ஜமா குறும்படம் பெரிய அளவில் பேசப்பட்டதுடன் விருதுகளையும் பெற்றது.

இன்று அவர் மாரடைப்பால் திடீரென காலமானார்.

கருப்பு கருணாவின் மறைவுக்கு சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு தலைவர்கள், படைப்பாளிகள், ஆளுமைகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமது முகநூல் பக்கத்தில், பெரும் துயர். தோழர் கருப்பு கருணாவை நான்கு ஐந்து ஆண்டுகளாகத் தான் தெரியும்;

ஒரே ஒருமுறை தான் திருவண்ணாமலை நிகழ்வில் சந்தித்திருக்கிறோம் என்றாலும் அடிக்கடி உள்பெட்டியில் உரையாடுவோம்.

தீவிரமான களப்பணியும் சிறந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர்.

அண்மையில் கூட அவரது பச்சை வேட்டி புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தேன். நெருநல் உளனொருவன் இன்றில்லை என இரங்கல் செய்தி பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே