டெல்லி : கொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர் சூட்ட முடிவு

டெல்லி சத்தார்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் வார்டுகளுக்கு கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக பெரிய கொரோனா சிகிச்சை மையம் தெற்கு டெல்லியில் ஷதார்பூரின் ராதா ஷோனாமி பியஸ் பகுதியில் 12 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உதவியுடன் டெல்லி அரசு ஏற்படுத்தி இருக்கும் இந்த மையத்தில் 10,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் 10% படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை, ராணுவம் உள்ளிட்ட படைகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையின் வார்டுகளுக்கு, கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயரைச் சூட்டுவதற்குப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மோடி லேக்குச் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து உரையாற்றித் திரும்பியுள்ள நிலையில் இவ்வாறு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே