குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஷிஃப்ட் முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே