மொகமட் ஷமி ரெடி என்கிறார் பஞ்சாப் கிங்ஸ் கோச் அனில் கும்ப்ளே- ஐபிஎல் முதல் போட்டியிலேயே ஆடுகிறார்

மொகமது ஷமி என்ற பெயர் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என்கிற அளவுக்கு காயத்தினால் மறக்கடிக்கப்பட்டு விட்டார். இப்போது ஐபிஎல் 2021க்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவர் ரெடி என்கிறார் அனில் கும்ப்ளே.

மொகமது ஷமி என்ற பெயர் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என்கிற அளவுக்கு காயத்தினால் மறக்கடிக்கப்பட்டு விட்டார். இப்போது ஐபிஎல் 2021க்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவர் ரெடி என்கிறார் அனில் கும்ப்ளே.

இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட முடியாத மணிக்கட்டு காயத்தில் சிக்கிய மொகமட் ஷமி ஐபிஎல் 2021-க்கு ரெடியாகி விட்டதாக கிங்ஸ் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார், அதுவும் சிலபல பயிற்சி ஆட்டங்களுக்குப் பிறகு முதல் போட்டிக்கே தயாராகி விடுவார் என்கிறார் அனில் கும்ப்ளே.

அப்படியே இந்தியன் டீம் பக்கம் கொஞ்சம் அனுப்பி வச்சாங்கன்னா அவர் முகத்தை மீண்டும் பார்ப்பதோடு அவரது அற்புதமான பந்து வீச்சையும் மீண்டும் ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீரர்களும் ஆடினால் போதும் என்ற அளவில்தான் உடல்தகுதியைப் பேணுகின்றனர், விராட் கோலி நீங்கலாக.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் மொகமட் ஷமி குறைதீவிர உடற் பயிற்சியை பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்நிலையில்தான் அனில் கும்ப்ளே, ஷமி முதல் போட்டிக்கே தயார் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறும்போது, “எனக்குத் தெரிந்த வரையில் ஷமி தயார்தான். இன்னும் சில நாட்களில் அணியுடன் இணைந்து விடுவார். அவர் எந்த போட்டியையும் ஆடவில்லை என்றாலும் எடுத்தவுடனேயே வீசுவதற்கு அவர் ஒரு நல்ல பவுலர்தான். நல்ல நிலையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். சில பயிறி ஆட்டங்களில் அவர் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு முதல் போட்டிக்கு அவர் தயாராகி விடுவார்.” என்றார்.

கிங்ஸ் பஞ்சாப் அணியில் ஜை ரிச்சர்ட்ஸன், ரைலி மெரிடித் என்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர், அவர்களுடன் ஷமியும் சேர்ந்து இந்த ஐபிஎல் தொடரில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரையும் முறையே ரூ.14 கோடி, ரூ.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. டெத் ஓவர்களுக்கு கிறிஸ் ஜோர்டான் இருக்கிறார்.

கே.எல்.ராகுல்தான் விக்கெட் கீப்பராக இருப்பார் என்று தெரிகிறது, அப்படி அவரது பணிச்சுமையைக் குறைக்க வேண்டுமென்றால் நிகோலஸ் பூரன் இருக்கிறார்.

ஏப்ரல் 12ம் தேதி IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் ஆடுகிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே