டேவிட் வார்னர் அவரது மனைவியுடன் இணைந்து புட்டபொம்மா பாடலுக்கு நடனம்..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவரது மனைவியுடன் இணைந்து புட்டபொம்மா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் அல வைகுந்தாபுரம்லூ.

அந்தப் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படத்தில் எஸ்.எஸ்.தமன் இசையில் உருவான புட்ட பொம்மா என்ற பாடலும் நடனமும் மாநில எல்லைகளைக் கடந்து பல தரப்பு மக்களுக்கும் சென்றடைந்தது.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவரது மனைவி கேன்டிஸ் வார்னருடன் இணைந்து புட்டபொம்மா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோ டிக்டாக் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

அதனையடுத்து, ட்விட்டரில் புட்டபொம்மா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே