கொரானா மற்றும் பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக கறிக்கோழி விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
சென்னையில் 10 நாட்களுக்கு முன் 90 ரூபாய்க்கு விற்ற உயிருள்ள கோழி 40 ரூபாய்க்கும், உரித்த கோழி 160 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கும் சரிவைக் கண்டுள்ளது.
கறிக்கோழி கொள்முதல், நாளொன்றுக்கு 5 லட்சத்தில் இருந்து 20 ஆயிரமாக குறைந்து விட்டதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் கொரானா வைரஸ் அச்சுறுத்தலால், கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு 28 ரூபாயாக சரிந்துள்ளது.
பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய உணவகங்கள் வரை, கோழி பிரியாணியின் விற்பனையும் சரிந்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.