11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகாமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள்:

1. தனியாக செயல்படுகின்ற காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதி.

2. காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

3. மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

4. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதி.

5. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

இந்த 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இ-பதிவு பெற்று வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் ஜூன் 14ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே