இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் தினமும், கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,20,529 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,94,879 ஆனது.மேலும் 1,97,894 பேர் நலமடைந்ததை தொடர்ந்து, வைஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்தது.தற்போது, 15,55,248 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 3,380 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,44,082 ஆனது.தற்போது வரை 22,78,60,317 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே