தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை.
உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் கடைசியாக விளையாடிய தோனி, ஐபிஎல்லில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நிறைவேறாமல் போனது.
இந்நிலையில் தற்போது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார் தோனி.
இந்நிலையில் தோனியின் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த வீடியோவில் தான் வாங்கி இருக்கும் புதிய டிராக்டரை தோனி ஓட்டி வருகிறார்.
அந்த வீடியோவுக்கு மெளன ராகம் திரைப்படத்தில் வரும் இளையராஜாவின் இசையை கோர்த்து வெளியிட்டுள்ளது சிஎஸ்கே.
“இளையராஜாவுடன் தல தோனியின் சந்திப்பு” என அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இசையோடு தோனி டிராக்டர் ஓட்டும் அந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.