சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.
போக்குவரத்து முடக்கம், தொழிற்சாலைகள் இயங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெயின் தேவை குறைந்துள்ளது.
அதேநேரம் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயை தேக்கி வைக்க போதுமான வசதி இல்லாத நிலை உருவாகியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்று அமெரிக்காவின் WTI வகை கச்சா எண்ணெய் விலை 7.82 சதவிகிதம் சரிந்து ஒரு பீப்பாய் 11.78 டாலராக வர்த்தகமாகிறது.
அதேபோல, பிரென்ட் வகை கச்சா எண்ணெய் 3.5 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய் 19.72 டாலரில் வணிகமாகிறது.
பல நாடுகளில் பொதுமுடக்கம் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் சூழலில், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் எழக்கூடும் எனக் கூறப்படுகிறது.