#COVAXIN : கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்!

கரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது கரோனா வைரஸ்.

உலக அளவில் ஒரு நாளைக்கே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது பல நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது.

அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் முயற்சித்துவருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கோவேக்ஸின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனான கூட்டணியில் கண்டறியப்பட்டுள்ளது,

தற்போது பலவிதமன பரிசோதனைகளுக்கு பிறகு விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து, மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதலை பெற்றுள்ளது.

அதன்படி, ஜூலை மாதம் முதல் கோவேக்ஸின் மருந்து மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செய்யப்பட்ட சோதனைகளில் இந்த கோவேக்ஸின் மருந்து நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது எனவும் இதில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு அதிகம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போலியோ, ரேபிஸ், ரோட்டா வைரஸ், ஜப்பானிய என்செபாலிடிஸ், சிக்குன்குனியா மற்றும் ஜிகா ஆகியவற்றுக்கான பல தடுப்பூசிகள் தயாரிப்பில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்கு முக்கியம்வாய்ந்தது.

உலக அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான பிரிவுகளில் 75க்கும் மேற்பட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ள இந்நிறுவனம் விரிவான மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதில் திறமையானது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே