தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 1,819 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,58,191 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2,520 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,30,272 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,478 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,08,668 ஆக உயர்ந்துள்ளது.

துவக்கத்தை விட கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டிற்குள் வருகிறது.

இதில், ஆறுதல் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே