தமிழகத்தில் இன்று (ஏப்.,25) மேலும் 66 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரு நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 23 ஆனது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 38 ஆண்களும், 28 பெண்களும் அடங்கும். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 34ல் இருந்து 41 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 7,707 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் கொரோனா தொற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 835 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 23 ஆனது.
சென்னை, கோவையில் 8 முதுநிலை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அவர்களில் 6 பேர், பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் வழங்கியுள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் தானம் வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.