கொரோனா வைரஸ் எதிரொலி – பிரதமரின் ஹோலி கொண்டாட்டம் ரத்து

கொரானா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கோவிட் 19 கொரானா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்குமாறு உலகம் முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த ஆண்டு தான் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு எந்தக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே