மீண்டும் பல வருடங்கள் கழித்து பெண் சிசு கொலை..

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பாக மனிதர்களின் சராசரி காலங்களின் வயது 90 வயதுக்கு மேல் ஆனால் இன்றைய நிலையில் 40 – 60வயது கடந்து வருவதே அதிகமாக தெரிகிறது.

மேலும் 90 வயதுக்கு மேல் இருக்கும் வயதானவர்கள் படுத்த படுக்கையாகஇருந்தால் விளக்கு எண்ணைய் தேய்த்தும், இளநீர் கொடுத்தும் குளிர் தாங்க முடியமால்முதியவர் இறந்து விடுவார்கள்.

வயது அதிகமாணவர்களை அப்படி இறக்கும் சூழ்நிலை ஏற்படுத்துவதும், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலும், எரிக்கலாம் செடி பாலும் கலந்து கொன்றுவிடும் நிகழ்வுகள் கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளன..

உங்கள் பெண் குழந்தைகள் பிறந்தநாளில் ஐந்து மரக் கன்றுகள் நடுங்கள் என்றும்; ஆணும் பெண்ணும் சமம். அதுவே அனைவரின் தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திர மோடி தான் தத்தெடுத்த ஜெயபூர் கிராமத்தில் நாட்டு மக்களுக்கு எழுச்சி உரை நிகழ்த்தினார்.

ஏழைப் பெண்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் பிறப்பு முதல் கல்வி -திருமணம் வரை மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

மேலும் பெண்கள் பாதுகாப்பு வலியுறுத்தி பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

எண்ணற்ற செயல்களை செய்தாலும் ஒரு சில இடங்களில் பெண்குழந்தை சிசுகொலைநிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளது

கடந்த மார்ச் 5 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளேறிபட்டு கிராமத்தில் பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலைசெய்த தம்பதியினாரை காவல் துறையினர் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது நடந்த நிகழ்வானது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மொத்த கிராமம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கவிதா.

இவர்களுக்கு கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த இரண்டு பெண் குழந்தைகளும் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.

கவிதாவின் கணவர் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். தனது மகள்கள் இருவரும் பள்ளி படிப்பு படிப்பதற்காக தனது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.

மீண்டும் கர்ப்பமான கவிதா இருபதாம் தேதி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 26-2-2020 கவிதாவுக்கு அழகான பெண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. இரண்டு நாட்கள் கழித்து 28–2020 அன்று கவிதா தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

2.3.2020 அன்று கோழிக்கறியும், நிலக்கடலையும் அதிகமாக சாப்பிட்டாதல் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை இறந்து விட்டதாக கூறி தனது வீட்டு அருகே பச்சிளம் குழந்தையை புதைத்துள்ளனர்.

இந்த தகவல் சமூக நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகர் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மாவட்ட குழந்தை நலம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாசில்தார் சந்திரசேகர் மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் தேவியிடம் இதுகுறித்து விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் தேவி ராமநாதபுரத்திற்கு சென்று கவிதாவிடம் மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாளிடமும் விசாரணை நடத்தி உள்ளார்.

விசாரணையின் போது இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின்பேரில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோரை ராஜதானி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆண்டிபட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சாகுல் அகமது மற்றும் சவரிமம்மாள் தேவி ஆகியோர் முன்னிலையில் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோர் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி எருக்கம் பால் ஊற்றி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் காலை ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கவிதாவை அழைத்து வந்தனர்.

கவிதா அடையாளம் காட்டிய இடத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவர் பிரேத பரிசோதனை மேற்கொண்டார்.

இதனையடுத்து பெண் சிசுக் கொலை செய்த தாயார் கவிதா மற்றும் மாமியார் செல்லம்மாள் ஆகியோரை ராஜதானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நமது செய்தியாளர் : பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே