ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ ஆர்.காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆர்.காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு உறுதியானதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்எல்ஏ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னதாக இன்று திமுக எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், கார்த்திகேயன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 16 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே