3 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு : சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா தடுப்பு பணியை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் செயல்படுவார்.

இவரை தவிர்த்து, வடக்கு மண்டலம், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி ஆபாஷ்குமார், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை மாநகராட்சி முதலாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி காமராஜ், டிஎஸ்பி வி.ஆதிமூலம்,

இரண்டாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி அமர் குஷ்வாகா, டிஎஸ்பி ஜீவானந்தம்,

மூன்றாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி குணசேகரன், டிஎஸ்பி ஆரோக்கிய ரவீந்திரன், டிஆர்ஓ விஜயா, சிஎம்ஏ இணை இயக்குனர் சங்கீதா,

நான்காவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன், சிபிசிஐடி எஸ்பி மல்லிகா, டிஆர்ஓ செந்தில்குமார், உணவு பாதுகாப்பு இணை இயக்குனர் செந்தில்

ஐந்தாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார், உளவுப்பிரிவு சிஐடி எஸ்பி ராஜேஸ்வரி, விழுப்புரம் சிறப்பு டிஆர்ஓ சிவருத்ரயா, டிஏஎன்எஸ்ஏசிஎஸ் இணை இயக்குநர் ஸ்டான்லி மைக்கேல்.

ஆறாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ், சிபிசிஐடி சைபர்செல் எஸ்பி ஜெயலட்சுமி, டிஆர்ஓ அருணா,விபிடிசி இணை இயக்குநர் கிருஷ்ணராஜ்

ஏழாவது மண்டலத்திற்கு ஆதி திராவிட நலத்துறை கமிஷனர் முனியநாதன், நீலகிரி டிசிபி டிஎஸ்பி சுப்ரமணியன்

எட்டாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி கோபால சுந்தர ராஜ், சிஐடி எஸ்பி கலைசெல்வன், வக் போர்டு டிஆர்ஓ ஜெய்நுலப்தீன், டாக்டர் கே சி சேரன்ஒன்பதாவது மண்டலத்திற்கு நகர திட்டமிடல்துறை இயக்குநர், சந்திரசேகர் ,ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி, டிஆர்ஓ சுப்புலட்சுமி

பத்தாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி வினீத், எஸ்பி மீனா, டாக்டர் சி சேகர்

பதினொன்றாவது மண்டலத்திற்கு, ஐஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ், டிஎஸ்பி ரியாசுதீன், டிஎஸ்பி சங்கர நாராயணன்

பன்னிரெண்டாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி சண்முகம், டிஎஸ்பி சங்கரநாராயணன்,

பதிமூன்றாவது மண்டலமத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலா, டிஎஸ்பி ஸ்ரீனிவாசன், டாக்டர் சேரன்

பதினான்காவது மண்டலத்திற்கு கோஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், சிபிசிஐடி டிஎஸ்பி கனகராஜ்

பதினைந்தாவது மண்டலத்திற்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் கருணாகரன், டிஎஸ்பி முத்துகுமார் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு அதிகாரிகளாக தொல்லியல் துறை ஆணையரும், அரசு முதன்மை செயலாளருமான உதயசந்திரன், ஐபிஎஸ் அதிகாரி அன்பு

திருவள்ளூர் மாவட்ட சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரி பாஸ்கரன், ஐபிஎஸ் அதிகாரி வனிதாகாஞ்சிபுரம் மாவட்டசிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரி எல் சுப்ரமணியன், ஐபிஎஸ் அதிகாரி பவனீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே