கொரோனா வைரஸ் தடுப்பூசி: #COVID19 தடுப்பூசி ஆண்களை விட பெண்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்…

தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன உதாரணமாக, காய்ச்சல். இவை தொற்றுக்கு எதிராக போராடுவது மட்டுமல்லாமல் உடலில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.

COVID-19 தடுப்பூசிகள், மக்களை கொரோனா என்னும் அரக்கனிடமிருந்து காக்கும் ரட்சகன் போல பார்க்கப்படுகின்றன. நீண்ட நாட்கள் தவம் கிடந்த பிறகு இப்போது COVID-19 தடுப்பூசிகள் பரவலாக கிடைக்க தொடங்கியுள்ளன. தடுப்பூசிகள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போன்றோருக்கு கிடைத்த பிறகு பொதுமக்களுக்கும் கிடைக்கத்தொடங்கியுள்ளன. இது ஒரு பக்கம் நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மறுபுறம் சோகத்தையும் தருகிறது. இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட பிறகு ஆண்களைவிட பெண்களுக்கு பக்கவிளைவுகள் அதிகம் ஏற்படுவதாக இப்போது செய்தி வெளியாகியுள்ளது தான் பலரின் சோகமாக உள்ளது.

தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன உதாரணமாக, காய்ச்சல். இவை தொற்றுக்கு எதிராக போராடுவது மட்டுமல்லாமல் உடலில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும், அதிக உணர்திறன் உள்ளவர்கள் கடுமையான பக்க விளைவுகளை கொண்டிருப்பதற்கான அதிக வாய்ப்புள்ளது என்று நீண்ட காலமாக நம்பப்படுகிறது. குளிர், அதிக வியர்வை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள், தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும். இவை முழுமையாக குணமடைய சிறிது காலம் ஆகும் அதுவரை மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன?

புதிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்கள் தடுப்பூசிக்கான பக்க விளைவுகளைப் அதிகம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. COVID-19 தொற்றுக்கு பெண்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டாலும், தடுப்பூசிகளின் பாதிப்பு என்பது புதிரானது. இது எவ்வாறு நிகழக்கூடும் என்பதையும், விரும்பத்தகாத அறிகுறிகளைப் போக்க வழிகளையும் இங்கே காண்போம்.

ஆய்வுகள் என்ன பரிந்துரைக்கின்றன?

தடுப்பூசிக்கு பிறகு பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் அந்த பாதிப்புகள் உலகளவில் பொதுவானவையாக இருந்தன. உண்மையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (Control and Prevention (CDC)) சமீபத்திய ஆய்வில், வெவ்வேறு வயதினருக்கு வழங்கப்பட்ட முதல் 13.7 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்தது. அதில் பக்கவிளைவுகளை பற்றி கண்காணிக்கும்போது, ஆண்களை விட, பெண்கள் 79.1% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பெண்கள் பாதகமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகிறார்களா?

தடுப்பூசிகளை ஒருவர் போட்டுக்கொண்டபின் பாதகமான அல்லது தீவிரமான பக்க விளைவுகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் கூட பெரும்பாலான எதிர்வினைகள் பெண்களிடம் உள்ளதையும் ஆய்வு குறிப்பிடப்பட்டுள்ளன. CDC ஆய்வின்படி, மாடர்னா தடுப்பூசியை பெற்ற 19 பெண்களில் ஒருவர் மட்டுமே பாதகமான முடிவை பெற்றுள்ளதாக நிகழ்வைப் பதிவுசெய்தனர், அதே நேரத்தில் ஃபைசர் ஷாட் வழங்கப்பட்டவர்களில் 44% பேர் அனாபிலாக்டிக் எதிர்வினைகளை கொண்டுள்ளனர். ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா அல்லது கோவாக்சின் தடுப்பூசிகளை பெற்றவர்களிடமும் மேற்கண்ட பகுப்பாய்வு செய்யப்படவில்லை.

பாலினம் ஒரு வித்தியாசமா?

ஒருவருக்கு இருக்கும் நோயெதிர்ப்பு அமைப்பு பக்க விளைவுகளை நன்றாக கையாளும் என்று நிபுணர்கள் நம்பினாலும், பக்க விளைவுகளை அனுபவிப்பது விரும்பத்தகாதது அதோடு ஒருவரால் எந்த வேலைகளையும் சரியாக செய்யவும் முடியாது. நிபுணர்களின் கூற்று படி தடுப்பூசியை பெற்றபின் ஆண்களைவிட பெண்கள் அதிக பக்கவிளைவுகளை கொண்டிருந்தாலும் கூட அவர்கள் இதைப் பற்றிய புகார் அளிப்பதில்லை என்றுள்ளார்.

பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி வித்தியாசமாக செயல்படுகிறதா?

உயிரியலும் இங்கே ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் COVID-19 தாக்குதல்களுக்கும் தீவிரத்தன்மைக்கும் ஆளாவதை போலவே, ஆண்களைவிட பெண்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் வலுவானதாக உள்ளது. சில ஆய்வுகள் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் தொற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை அதிகமாகவே உருவாக்குகிறார்கள் என்றுள்ளனர்.

பெண்கள் அதிக பாதகமான எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கிறார்களா?

இந்த கூற்று மருத்துவ ரீதியாக இன்னும் நிறுவப்படவில்லை என்றாலும், இந்த சந்தர்ப்பங்களில், தடுப்பூசி மருந்துகள் ஆண்களை விட பெண்களிடம் வித்தியாசமாக செயல்படுகின்றன. தடுப்பூசியின் அளவு வழக்கமான அளவை விட அதிகமாக வழங்கப்பட்டால், பெண்கள் அதிக பாதகமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஒருபுறம் பேசப்படுகிறது. முந்தைய தடுப்பூசிகள் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி, தட்டம்மை மற்றும் மம்ப்ஸ் தடுப்பூசியையும் ஆய்வு கணக்கில் கொண்டுள்ளது.

பாதகமான அறிகுறிகளைப் போக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கோவிட் -19 தடுப்பூசியை பெற வேண்டிய ஒரு பெண்ணாக இருந்தால், தீவிர எதிர்விளைவுகளால் பாதிக்கப்படுவீர்கள் என்ற எண்ணம் வேண்டாம். இருப்பினும், நீங்கள் கொஞ்சம் உணர்திறன் உடையவராகவும், குறைந்த வலி சகிப்புத்தன்மையுடனும் இருந்தால், உங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள வேண்டும், இந்த மனநிலை நீங்கள் அனுபவிக்கும் எந்த அறிகுறிகளையும் நிர்வகிக்க உதவும்.

உதாரணமாக, வீக்கம், ஊசி போடும் இடத்தில் வலி, விறைப்பு ஆகியவற்றிற்கு சூடான/குளிர் நீரை கொண்டு ஒத்தடம் அளிக்கலாம் அல்லது சில லேசான வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் சிக்கலை நிர்வகிக்கலாம். அதிக காய்ச்சல், அசாதாரணமானது என்றாலும் ஆன்டிபிரைடிக் மருந்துகள் அல்லது இயற்கை காய்ச்சல் நிவாரணிகளைப் பயன்படுத்தி உடல் சிக்கலை குறைக்கலாம். ளிர், சோர்வு, காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளைப் பொறுத்தவரை இவை விரைவில் குணமாகிவிடும் என்றாலும் அதை சரியான கூடுதல் மருந்துகளுடன் ட்ரீட் செய்யவேண்டும். தடுப்பூசி கிடைத்த 2-3 நாட்கள் வரை மனதிற்கு உற்சாகமளிக்கும் செயல்களை செய்து உங்களை மகிழ்வுடன் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் எவ்வளவு மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு மோசமான பக்க விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வாய்ப்புள்ளது. போதுமான தண்ணீரை குடிக்கவும், நன்றாக சாப்பிடவும், உடலை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு நீங்களே அறிவுறுத்துங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே