டெல்லியில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் புதிய பாதிப்புகளும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்போது பண்டிகைக் காலத்தில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இதனையடுத்து பரிசோதனை, பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை போன்றவற்றில் டெல்லி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

டெல்லியில் கோவிட்-19-இன் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த கூட்டத்தில் ஏற்கெனவே விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உணவகங்கள், சந்தைகள் முடி திருத்தும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ பயணத்தில் முறையான வழிகாட்டுதல் முறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே