உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு உயர்வு..

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகள் பட்டியலில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி, புதிதாக 9,887 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,642 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், ஒரே நாளில் அதிகபட்சமாக 9,887 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகளவில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் பலி எண்ணிக்கையில் 12வது இடத்தில் உள்ளது. 

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

அதில், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாவதால், பல மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் ரஷ்யாவும், 4வது இடத்தில் ஸ்பெயினும், 5வது இடத்தில் பிரிட்டனும், 7 வது இடத்தில் இத்தாலியும், 8 வது இடத்தில் பெருவும், 9 வது இடத்தில் ஜெர்மனியும், 10 வது இடத்தில் துருக்கியும் உள்ளன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே