ஜன.2-ல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய அரசு அறிவிப்பு..!!

அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கல் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது கட்ட அலைப்பரவல் கொரோனா உருமாற்றம் பெற்றுப் பலநாடுகளுக்குப் பரவிவருகிறது.

இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

எனவே, அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநிலத் தலைநகரங்களில் 3 கட்டங்களாக தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் எனவும், கொரோனா தடுப்பு செலுத்துவதற்காக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே