ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி – அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு..!!

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பயன்பாட்டிற்கு வந்ததும் 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு மருந்து அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் முன்பைவிட சற்று குறைந்திருந்தாலும் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

பல நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் பரவுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் விரைவாக தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டிவந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதேநேரத்தில், கொரோனாவை முற்றிலும் களைய உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஃபைசர் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவசர கால பயன்பாட்டுக்காக ஃபைடச, சீரம், கோவாக்சின் ஆகிய மருந்துகள் விண்ணப்பித்துள்ளன.

அதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். முன்களப் பணியாளர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள் என 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அளித்த ஊசி போடப்படும் என்றும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே