தங்க நாணயம் : நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா…

கைலாசா நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை நித்தியானந்தா வெளியிட்டார்.

நித்தியானந்தா உருவாக்கி இருக்ககூடிய கைலாசா தீவிற்காக கரன்சிகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என நித்தியானந்தா அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த கரன்சிகள் எப்படி இருக்கும்? ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

56 நாடுகளுடன் வர்த்தகம்:

அதில் 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும். இந்த 56 நாடுகளில் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுபோன்று நடைமுறைகள் இருக்கும் என கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, ஆகிய பல்வேறு நாடுகளை அவர் இந்து நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

இவை எல்லாம் அடங்கியவை அகண்ட பாரதம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தங்கத்தில் நாணயம்:

குறிப்பாக கைலாசா தீவின் ரூபாய் நோட்டுகள், நாணையங்கள் அனா அனைத்துமே தங்கத்தில் இருக்கும். ஏனென்றால் இந்து மதத்தை பொறுத்தவரையில் தங்கம் என்பது ஒரு உலோகம் மட்டும் கிடையாது. அது மிகவும் புனிதம் வாய்ந்தது.

எனவே கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே அச்சடிக்கப்படும்.

குறிப்பாக இந்த கைலாசாவின் கரன்சிகள் சமஸ்கிருதத்தில் சொர்ண முத்திரா என அழைக்கப்படும். தமிழில் பொற்காசு என்றும் ஆங்கிலத்தில் டாலர் என்றும் அழைக்கப்பட்டும் என கூறினார்.

கரன்சியின் சிறப்பம்சம்:

அதே நேரத்தில் இந்த கரன்சிகள் அனைத்தும் ஒரு காசு, 2 காசு, 3 காசு, 5 காசு, 10 காசு, என்ற மதிப்பீட்டில் அச்சிடப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஒரு டாலரில் 1.66 கிராம் தங்கம் இருக்கும், 25 முதல் 30 வரிகளில் இந்த கரன்சிகள் அச்சிடப்படும்.

கைலாசா நாட்டின் ரிசர்வ் வங்கியை பொறுத்தவரையில் வேத மற்றும் ஆகம விதிகளை பின்பற்றி கைலாசா தீவின் பொருளாதார கொள்கைகள் இருக்கும். இந்த கரன்சியை உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்.

மேலும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலாசா பணம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே