சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா..!!

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் 2ஆவது அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாக உள்ளது. தேர்தலின் போது பரப்புரை நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து நோய் பரவும் வேகம் மிக வேகமாக உள்ளது. தற்போது தினந்தோறும் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்பு 250 நெருங்கியுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இன்று முதல் முழு முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே