கொரோனா: கட்டுப்படுத்த சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு 1லட்சம் ரூபாய் பரிசு

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து சிறந்த கருத்துகளை தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை 15 மாநிலங்களில் தடம் பதித்துள்ள கொரோனாவால் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவாக மகாராஷ்டிராவில் 36 பேரும் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து மோடி மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து சிறந்த கருத்துகளை தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஆரோக்கியமான உலகை உருவாக்க, புத்தாக்க சிந்தனைகள் தேவை எனத் தெரிவித்துள்ளார்.

அத்தகைய கருத்துகளை @mygovindia என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிர வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே