பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; பலி எண்ணிக்கை 2,815

பிரேசிலில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,815 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால்,பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதேபோன்று பிரேசில் நாடும் அதிக கரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது. அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 90,570 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்நாட்டில் 2,815 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் பிரேசிலில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்து 71 ஆயிரத்து 390 ஆக உயர்வடைந்து உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 314 ஆக உயர்ந்து உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே