டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில், மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.
இதில் 2-வது இடத்தில் இருந்த டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக சற்று குறைந்தே வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,
டெல்லியில் உள்ள மக்கள் அனைவரின் உதவியுடன் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
டெல்லியில் கொரோனா நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளதால், சோதனை அடிப்படையில், டெல்லி மெட்ரோவை ஒரு கட்டமாக மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரியுள்ளோம்.
விரைவில் மையம் ஒரு முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்றுவரை 1,60,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 144,138 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் 11,594 பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

