தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா சமூக பரவல் நிலையில் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அறிகுறி இல்லாதவர்கள், இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அக்கறையுடன் சிகிச்சை நடைபெறுகிறது.

முதியவர்கள், இதய நோய், கேன்சர் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனவில் இருந்து குணமடைவோரின் விகிதம் 57% ஆக உள்ளது என்றார்.

தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வருவாய்த்துறை மூலம் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல்முறையாக இன்று 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே