இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இருப்பினும் நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93.51 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 93,51,110 ஆக உள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,200 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,59,969 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,54,940 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே