தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

தமிழகத்தில் புதிதாக நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 53 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் கேரளம் மற்றும் மகாராஷ்டரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த வாரத்திலிருந்தே கொரோனாத் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில் ஏற்பட்ட சுனக்கமே நோய்த் தொற்று அதிகரித்து இருப்பதற்கு காரணம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் முன்பைவிட நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. இதனால் பொதுமக்கள் முன்புபோல் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம், சானிடைசர் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் 189 பேருக்கு கொரோனா


சென்னையில், புதிதாக 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 லட்சத்து 36 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 55 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது.

3 மாவட்டங்களில் புதிதாக தொற்று இல்லை

தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தருமபுரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 50,706 மாதிரிகள் பரிசோதனை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 706 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை, 1 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 12 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே