இந்தியாவில் ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதார அமைச்சகம்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 94,372 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 47,54,357-ஆக அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,114 பேர் உயிரிழந்தனா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 78,586-ஆக அதிகரித்துள்ளது. 

இது கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.66 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 37,02,596-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் சுமாா் 60 சதவீதம் போ மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோந்தோா் ஆவா்.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 77.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 9,73,175 போ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாட்டில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 10,71,702 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 12-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5,62,60,928 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே