தமிழகத்தில் இன்று புதிதாக 2,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,46,079 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,362 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,308 என்ற அளவில் உள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,15,892 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 18,825 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப காலத்தில் சென்னையில் 600க்கு குறைவாக கொரோனா பாதிப்பு முதல் முறையாக, இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே