இந்தியாவில் புதிதாக மேலும் 18,833 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 8850 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 18,833

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,38,71,881

இதுவரை குணமடைந்தோர்: 3,31,75,656

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 24,770.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 278.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,49,538

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,46,687. இது கடந்த 203 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 91,54,65,826 கோடி தவணை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 72,51,419 தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே