சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்குக் கொரோனா!

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள சென்னை அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சில உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த 13வது ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டு, ஐக்கிய அரபு எமீரேட்ஸில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் மற்றும் அபுதாபிக்கு தனி விமானம் மூலம் சென்று, அங்குள்ள விடுதியில் ஆறு நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையவுள்ள நிலையில், சென்னை அணி வீரர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் துபாயில் உள்ள அந்த அணியின் உறுப்பினர்கள் 12 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சென்னை அணி வீரர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை செப்.,1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே