கொரோனாவால் பலியானவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களே..!!

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பெருகி வரும் நிலையில் பொது சுகாதார அமைப்பு இயக்குனர் செல்வா விநாயகம் கருத்து தற்போது பேசு பொருளாகிவுள்ளது.

‘கடந்த இரண்டு மாதங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 87 சதவீதம் பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்’ என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் : கொரோனா தடுப்பூசி மரணத்தை வெகுவாக தடுக்கிறது.கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 1626 பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். இதில் 1419 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள். அதாவது 87 சதவீதம். இவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் இறப்பை தவிர்த்திருக்க முடியும். அதேபோல முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் வெறும் நான்கு சதவீதம் பேர் மட்டுமே கோவிட்டால் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரு மாதங்களில் 88 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டதில் தடுப்பூசி செலுத்திய 45 சதவீதம் பேர் பாதிப்பின்றி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 5816 பேரில் 4405 பேர் தடுப்பூசி போடாதவர்கள். இரண்டு மாதங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே