கொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..!! வெளியே வருபவர்களின் வாகனம் அதிரடி பறிமுதல்..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில், முதலில் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மக்கள் அதிகளவு கூடும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்க நேரக்கட்டுப்பாடு குறைக்கப்பட்டு, காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களின் நடமாட்டமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

ஊரடங்கை மீறி பல்வேறு நபர்களும் வாகனங்களில் சுற்றிவரும் நிலையில், சென்னை காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விடும் பணிகளை தீவிரப்படுத்தினர். 

சென்னை பெருநகரில் உள்ள 12 மாவட்ட காவல் எல்லைகளில் 13 வாகன தணிக்கைசாவடிகள் மொத்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவல் நிலைய சரகத்தில் உள்ள மக்கள் அந்தந்த பகுதிகளுக்கு மட்டுமே சென்று வரும் வகையில், ஒருசரக எல்லையில் இருந்து மற்றொரு சரத்துக்கு செல்லாத வகையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும், காலை 10 மணிக்கு மேல் அத்தியாவசிய காரணமின்றி வெளியே வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே