அதிபர் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார கூட்டங்களால் கொரோனா அதிகரிப்பு…!!

ட்ரம்ப் நடத்திய பேரணிகளால் அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பரவியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய 18 அரசியல் பேரணிகளை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு முடிவில் 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளும், 700-க்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. 2,25,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக கொரோனா பரப்பும் நிகழ்வுகளை அதிபர் ட்ரம்ப் நடத்தி வருவதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றஞ்சாட்டினார்.

ட்ரம்ப் நடத்திய பேரணியில் அவரது ஆதரவாளர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டமாக குவிந்தனர். ட்ரம்ப் தன்னைப் பற்றியும் கவலைப்படவில்லை,; தனது ஆதரவாளர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்று ஜோ பிடன் விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே