கொரோனா பாதிப்பு- கோடம்பாக்கம் முதலிடம்

சென்னையில் இன்றைய நிலவரப்படி கரோனா நோயாளிகளை அதிகம் கொண்ட நோயாளிகளுடன் கோடம்பாக்கம் மாறியுள்ளது. இங்கு மட்டும் 461 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் திரு.வி.க நகர் – 448 பேர், ராயபுரம் – 422 பேர், தேனாம்பேட்டை – 316 பேர் என ஆங்காங்கே பாதிப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா நோயாளிகள் குறைவாக இருக்கும் மண்டலமாக மணலி உள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே