உலகளவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு

உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி தற்போது உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

அந்த நோய்த்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதேசமயம் பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை தாண்டியது. இந்த நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

அங்கு இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,75,659 ஆக உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது. அங்கு 1,57,053 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நோய்த் தொற்றால் அதிகம் பலியானோரின் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. அங்கு இதுவரை 18,279 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 17,838 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயினில் பலியானோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை கடந்த 17 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று, ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புக்கு 605 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தினசரி இறப்புகளில் கடந்த 17 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே